வொண்டர் உமன் திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்று, டிசி உலகின் முடிசூடா ராணியாக வலம் வரும் இஸ்ரேலிய அழகி கால் கடாட்.
நல்ல உயரத்துடனும் பொலிவான தோற்றத்துடனும் வொண்டர் உமனாக திரையில் துள்ளிக் குதித்து அதிரடி காட்டும் கால் கடாட், திருமணம் ஆனவர் என்பதையே அவரது ரசிகர்கள் நம்ப மறுத்து வரும் நிலையில், முன்னதாக தன் மூன்றாவது குழந்தையை கால் பெற்றெடுத்துள்ளார்.
குடும்பப்படம் பகிர்ந்த வொண்டர் உமன்
இந்நிலையில், தனது கணவர், குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள கால் கடாட், ”இது என் அழகிய குடும்பம். இதைவிட அதிக மகிழ்ச்சியாக நான் இருக்க முடியாது. டேனியலாவின் வரவால் நாங்கள் அனைவரும் மகிழ்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜான் வர்சானோவை திருமணம் செய்துகொண்ட கால் கடாட், இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் கருவுற்று இருப்பதை ரசிகர்களுக்கு அறிவித்தார்.
சென்ற ஆண்டு இறுதியில் அவரது ’வொண்டர் உமன் 1984’ திரைப்படம் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
மேலும் பிரபல கிரைம் த்ரில்லர் நாவலாசிரியரான அகதா க்ரிஸ்டியின் ’டெத் ஆன் த நைல்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்திலும் கால் கடாட் தற்போது நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் வாழத் தகுதியுடைய நாடு - 'வொண்டர் வுமன்' கால் கேடட்