ETV Bharat / sitara

கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியன் நடத்தும் 'தர்பார்' - அஇஅதிமுகவில் இணைந்த அன்புச்செழியன்

அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டில் அதிகம் அடிபட்ட பெயர் அன்புச்செழியனாகத்தான் இருக்கும். பின்தங்கிய மாவட்டத்திலிருந்து புறப்பட்டு வந்து, பிற்காலத்தில் தமிழ்த் திரைப்படத்துறையையே ஆட்டி வைப்பார் என்று யாரும் அன்று எதிர் பார்த்திருக்க மாட்டார்கள் தான். ஏன், அவரே கூட எதிர் பார்த்திருக்க மாட்டார். வருமான வரி சோதனை காரணமாக மீண்டும் கவனம் பெற்று பெரும் விவாதத்திற்குள் வந்துள்ள அன்புச்செழியன் குறித்த ஓர் செய்தித் தொகுப்பு இதோ...

from-kamuthi-to-kodambakkam-anbaru-chezhians-darbar
கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியனின் 'தர்பார்'
author img

By

Published : Feb 7, 2020, 7:44 PM IST

தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள குக்கிராமம் பம்மனேந்தல். அது தான் அன்புச்செழியனின் பூர்வீகம். அன்புச்செழியனின் தந்தையார் பள்ளி ஆசிரியர். மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து மதுரைக்குப் பிழைக்க வந்தவர். அரசுப் பணிக்குச் செல்ல குடும்பத்தார் வலியுறுத்தியபோது, 'சுயதொழில் தான் செய்வேன்' என்று கூறிவிட்டு, வெறும் ரூ.10 ஆயிரத்துடன் மதுரை வந்து சேர்ந்தவர் தான் இந்த அன்புச்செழியன்.

from-kamuthi-to-kodambakkam-anbaru-chezhians-darbar
கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியனின் 'தர்பார்'

மதுரை மாநகரிலுள்ள கீரைத்துறை, செல்லூர், வாழைத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான மக்கள், பல்லாண்டு காலமாக வட்டிக்கு விடுவதையே தங்களது தொழிலாகச் செய்து வருகின்றனர். அப்படியொரு பின்னணியையொட்டி தான், கீரைத்துறையைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளிகளிடம் வட்டித்தொழிலைத் தொடங்குகிறார், அன்பு. சில ஆண்டுகளில் அங்கு அசைக்க முடியாத ஆளாக, மாறும் அவருக்கு மாவட்ட அளவில் அரசியல் செல்வாக்கும் கூடுகிறது.

கடந்த 1995ஆம் ஆண்டு தொடங்கிய அன்புச்செழியனின் வட்டித்தொழில், மதுரை தெற்காவணி மூல வீதியிலுள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் வரை விரிவடைந்தது. இந்நேரத்தில்தான் ஆட்சியிலிருந்த திமுக-வின் முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் தொடர்பும் ஆதரவும் அன்புச்செழியனுக்கு கிடைக்கத்தொடங்கியிருந்தது.

இந்நிலையில் பழைய படங்கள் சிலவற்றைப்பெற்று, தென் மாவட்டங்களில் விநியோகம் செய்யும், சிறிய அளவிலான விநியோகஸ்தராகவும் அன்பு உயர்வு பெற்றார். அதுவரை வட்டித்தொழில் செய்யும் ஃபைனான்சியராக இருந்தவர் சினிமா விநியோகஸ்தர் என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்கிறார்.

பிறகு படிப்படியாக மதுரையிலிருந்து அவரது அன்புச்செழியனின் 'தர்பார்' சென்னைக்கு விரிவடைகிறது.

இதற்கிடையே தமிழ்த் திரைப்படத்துறையில் இருந்த சிறிய தயாரிப்பாளர்களின் தொடர்பும் கிடைக்க, அவர்களது படங்கள் பலவற்றிற்கும் வட்டிக்குப் பணம் அளித்து, தமிழ்த் திரைப்படத்துறையில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்கினார், அன்புச்செழியன்.

பொதுவாக தமிழ்த் திரைப்படத்துறையில் வட்டிக்குப் பணம் தருபவர்களாக மார்வாடிகள், சேட்டுகள் உள்ளிட்ட வடநாட்டு முதலாளிகள் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், அன்புச்செழியனின் வருகை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உற்சாகமாகவே இருந்தது.

பிற முதலீட்டாளர்களோடு ஒப்பிடுகையில், அன்புச்செழியன் தான் கொடுக்கின்ற பணத்திற்குப் பிணை எதுவும் பெறுவதில்லை. ஆனால், படம் வெளியானவுடன் பணத்தை வட்டியும் முதலுமாகக் கொடுத்துவிட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

அவ்வாறு தரத் தயங்கினால் தான், அன்புச்செழியன் தனக்கேயுரிய நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொள்வார். மிகக் கடுமையாக ஆரம்பித்து கொடுமையாக முடியுமளவிற்கு இருக்கும் என்கிறார்கள் அவரது முன்னாள் நண்பர்கள் சிலர். மணிரத்னத்தின் சகோதரர் ஜீ.வெங்கடேஸ்வரன், அது போன்ற இக்கட்டில் சிக்கியே கடந்த 2003ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. அத்தருணம் தமிழ்நாடு திரைப்படத்துறையே கொந்தளித்தது. இதில் அன்புச்செழியனின் பெயரும் அடிபட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அன்புச்செழியன் மீதான பார்வை பரவலாக விழத் தொடங்கியது. அதே நேரம் திமுக அமைச்சர்களோடு குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரியோடும் அவரது மகன் தயாநிதி அழகிரியோடும் அன்புச்செழியன் நெருக்கமடைந்திருந்தார் என கூறுகின்றனர், சிலர். இதன் காரணமாகவே அன்பு மீது தொடுக்கப்படும் வழக்குகள் யாவும் பெயரளவில் மட்டுமே இருந்தன.

தமிழ்த் திரைப்படத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகை ரம்பா, தான் தயாரித்த படம் ஒன்றிற்கு அன்புச்செழியனிடம் பெற்ற பணத்தை திரும்பத் தர முடியவில்லை. அவரை மதுரைக்கு கடத்திச் சென்று அன்பு தரப்பினர் பணம் பெற்றதாகவும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுபோன்ற சிக்கலில் நடிகர் அஜித்தும் கூட தப்பவில்லை என்று தகவல் சொல்கிறது கோடம்பாக்க வட்டாரம் !

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து, அஇஅதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார், அன்பு.

அன்புச்செழியனின் அரசியல் தொடர்பு

அன்புச்செழியனின் இந்த அரசியல் தொடர்பு பின்னர் மேலும் விரிவடைந்து, ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னர் அதிமுகவினரிடமும் தொடர்ந்தது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமன்றி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையே சந்தித்துப் பேசும் அளவிற்கு தனது நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார், அன்புச்செழியன். தற்போது அதிமுக இளைஞர் அணி பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும் அவருடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், அன்புச்செழியனிடம் வாங்கிய கடனுக்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

தற்கொலை செய்து கொண்ட மணிரத்னத்தின் சகோதரர் ஜீ.வெங்கடேஸ்வரன், நடிகர் சசி குமாரின் மைத்துனர் அசோக்குமார் (வலமிருந்து இடம்)

இதன் உச்சமாக அதிகார வர்க்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அன்புச்செழியனை 'இங்கு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது' என உருக்கத்துடன் அவர் கடிதம் எழுதிச் சென்றதும் திரையுலகையே புரட்டிப்போட்டது. அசோக்குமார் தற்கொலை வழக்கில் அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் எனத் திரையுலகினர் பலரும் கோரிக்கை வைத்தனர். அவரால் பாதிக்கப்பட்ட பல திரை உலகப் பிரபலங்களும் அவருக்கு எதிராகப் பேட்டி அளித்தனர்.

செய்தி பூதாகரமாகி அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. அதன் காரணமாக காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்ததுடன் சரி. அந்த வழக்கின் தற்போதைய நிலைமை என்ன? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இதற்கிடையே தனது 'கோபுரம்' கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் வாயிலாக படத் தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கினார். அடுத்த சில மாதங்களிலேயே மறுபடியும் திரைப்பட விழாக்களில் பங்கேற்கத் தொடங்கிய அன்புச்செழியன், தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் வெற்றி விழாவிலும் கூட பங்கேற்றார்.

தமிழ்த் திரைப்படத்துறையுலக தயாரிப்பாளர்களோடு... அன்பு அமர்ந்திருக்கும் படம்

அண்மையில் வெளியான நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படத்திற்கு அன்புச்செழியனே முதலீடு செய்தார். இதனைத் தொடர்ந்து, அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது.

பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகருடன்

ஒவ்வொரு முறை சிக்கியபோதும் அதிலிருந்து வெளிவந்து, அந்த சுவடே தெரியாமல் மீண்டும் திரையுலகில் உலா வரும் அன்புச்செழியன், இந்தமுறை கைது செய்யப்படுவாரா எனப் பல கேள்விகளை ஏந்தி காத்திருக்கிறது திரையுலகம்.

சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர்

இதுவரை அவர் மீது பதிவான எந்த வழக்குகளிலும் விசாரணைக்குக்கூட அவர் அழைக்கப்பட்டதில்லை. அதிகார வர்க்கம், அவரது அலுவலக மேசைக்கு அடியில் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி இருக்கின்ற நிலையில், வருமான வரித்துறையினர் நடத்தும் இந்த அதிரடி சோதனை அன்புச்செழியனை எந்த அளவிற்கு அசைத்துப் பார்க்கும் என்பதை போகப் போகத்தான் அறிய முடியும்.

Intro:கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியனின் 'தர்பார்'

அண்மைக்காலங்களில் தமிழகத்தில் அதிகம் அடிபட்ட பெயர் அன்புச்செழியனாகத்தான் இருக்கும். பின்தங்கிய மாவட்டத்திலிருந்து புறப்பட்டு வந்து பிற்காலத்தில் தமிழ்த் திரைப்படத்துறையையே ஆட்டி வைப்பார் என்று யாரும் அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான். ஐடி ரெய்டு காரணமாக மீண்டும் விவாதத்திற்குள் வந்துள்ள அன்புச்செழியன் குறித்த ஓர் செய்தித் தொகுப்பு.Body:கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியனின் 'தர்பார்'

அண்மைக்காலங்களில் தமிழகத்தில் அதிகம் அடிபட்ட பெயர் அன்புச்செழியனாகத்தான் இருக்கும். பின்தங்கிய மாவட்டத்திலிருந்து புறப்பட்டு வந்து பிற்காலத்தில் தமிழ்த் திரைப்படத்துறையையே ஆட்டி வைப்பார் என்று யாரும் அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான். ஐடி ரெய்டு காரணமாக மீண்டும் விவாதத்திற்குள் வந்துள்ள அன்புச்செழியன் குறித்த ஓர் செய்தித் தொகுப்பு.

தமிழகத்தின் மிகப் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்படும் ராமநாதபுரம், கமுதி அருகே உள்ளது பம்மனேந்தல். அன்புச்செழியனின் தந்தையார் பள்ளி ஆசிரியர். மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து மதுரைக்குப் பிழைக்க வந்தவர். அரசுப்பணிக்குச் செல்ல குடும்பத்தார் வலியுறுத்தியபோது, சுயதொழில் செய்வேன் என்று கூறிவிட்டு வெறும் ரூ.10 ஆயிரத்துடன் மதுரை வந்து சேர்ந்தவர்தான் இந்த அன்புச்செழியன்.

மதுரை மாநகரிலுள்ள கீரைத்துறை, செல்லூர், வாழைத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தோர், பல்லாண்டு காலமாக வட்டிக்கு விடுவதையே தங்களது தொழிலாகச் செய்து வருகின்றனர். அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் கீரைத்துறையைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளிகளிடம் வட்டித்தொழிலை அன்பு தொடங்குகிறார்.

கடந்த 1995-ஆம் ஆண்டு தொடங்கிய அன்புச்செழியனின் வட்டித்தொழில், மதுரை தெற்காவணி மூல வீதியிலுள்ள திரைப்பட விநியோகஸ்தர்களிடம் மேலும் விரிவடையத் தொடங்கியது. இந்நேரத்தில்தான் ஆட்சியிலிருந்த திமுக-வின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் தொடர்பும் ஆதரவும் கிடைக்கத் தொடங்கியிருந்தது.

இந்நிலையில் பழைய படங்கள் சிலவற்றைப் பெற்று தென் மாவட்டங்களில் விநியோகம் செய்யும், சிறிய அளவிலான விநியோகஸ்தராகவும் அன்பு உயர்வு பெற்றார். பிறகு படிப்படியாக அவரது 'தர்பார்' சென்னைக்கு விரிவடைந்தது. இதற்கிடையே தமிழ்த் திரைப்படத்துறையில் இருந்த சிறிய தயாரிப்பாளர்களின் தொடர்பும் கிடைத்தது. அவர்களது படங்கள் பலவற்றிற்கும் வட்டிக்கு பணம் அளித்து, தமிழக திரைப்படத்துறையில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

பொதுவாக தமிழ் திரைப்படத்துறையில் வட்டிக்கு பணம் தருபவர்களாக மார்வாடிகள், சேட்டுகள் உள்ளிட்ட வடநாட்டு முதலாளிகள் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், அன்புச்செழியனின் வருகை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உற்சாகமாகவே இருந்தது. பிற முதலீட்டாளர்களோடு ஒப்பிடுகையில், அன்புச்செழியன் தான் கொடுக்கின்ற பணத்திற்கு பிணை எதுவும் பெறுவதில்லை. ஆனால் படம் வெளியானவுடன் பணத்தை வட்டியும் முதலுமாகக் கொடுத்துவிட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

அவ்வாறு தரத் தயங்கினால்தான், அன்புச்செழியன் தனக்கேயுரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். மிகக் கடுமையாக ஆரம்பித்து கொடுமையாக முடியுமளவிற்கு இருக்கும் என்கிறார்கள் அவரது முன்னாள் நண்பர்கள் சிலர். மணிரத்னத்தின் சகோதரர் ஜீ.வெங்கடேஸ்வரன், அதுபோன்ற இக்கட்டில் சிக்கியே கடந்த 2003-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அச்சமயம் தமிழக திரைப்படத்துறையே கொந்தளித்தது. இதில் அன்புச்செழியனின் பெயரும் அடிபட்டது.

இந்த சம்பத்திற்குப் பிறகுதான் அன்புச்செழியின் மீதான பார்வை பரவலாக விழத் தொடங்கியது. அதே நேரம் திமுக அமைச்சர்களோடு குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரியோடும் அவரது மகன் தயாநிதி அழகிரியோடும் அன்புச்செழியன் நெருக்கமடைந்தார். இதன் காரணமாக அன்பு மீது தொடுக்கப்படும் வழக்குகள் பெரியளவில் கண்டு கொள்ளப்படவில்லை.

தமிழ் திரைப்படத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகை ரம்பா, தான் தயாரித்த படம் ஒன்றிற்கு அன்புச்செழியனிடம் பெற்ற பணத்தை திரும்பத் தர முடியவில்லை. அவரை மதுரைக்கு கடத்திச் சென்று அன்பு தரப்பினர் பணம் பெற்றதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது போன்ற சிக்கலில் நடிகர் அஜீத்தும்கூட தப்பவில்லை எனவும் தகவல்.

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்கிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் நடிகர் சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார், அன்புச்செழியனிடம் வாங்கிய கடனுக்காக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன் சரி. அந்த வழக்கு என்ன ஆனது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அன்புச்செழியனின் இந்த அரசியல் தொடர்பு பின்னர் மேலும் விரிவடைந்து, ஜெ.வின் இறப்புக்குப் பின்னர் அதிமுகவினரிடமும் தொடர்ந்தது. துணை முதல்வர் ஓ.பி.எஸ். மட்டுமன்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையே சந்தித்துப் பேசும் அளவிற்கு தனது நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார் அன்புச்செழியன். தற்போது அதிமுக இளைஞர் அணி பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தனது 'கோபுரம்' கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் வாயிலாக படத் தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கினார். அண்மையில் வெளியான நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படத்திற்கு அன்பு செழியனே முதலீடு செய்தார். அன்பு மீது பதிவான எந்த வழக்குகளிலும் இதுவரை விசாரணைக்குக்கூட அவர் அழைக்கப்படவில்லை என்பதோடு, அதிகார வர்க்கம் அவரது அலுவலக மேசைக்கு அடியில்தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் நடத்தும் இந்த அதிரடி சோதனை அன்புச்செழியனை எந்த அளவிற்கு அசைத்துப் பார்க்கும் என்பதை போகப் போகத்தான் உணர முடியும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.