‘விக்ரம் வேதா’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார். தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மட்டும் மனதில் கொண்டு, அவர் படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
We are overwhelmed and excited to have our versatile star, '#MakkalSelvan’ @VijaySethuOffl sir on board for #Thalapathy64 🔥 #VJSjoinsThalapathy64 #Summer2020@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @SonyMusicSouth pic.twitter.com/JyFFosIVbj
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are overwhelmed and excited to have our versatile star, '#MakkalSelvan’ @VijaySethuOffl sir on board for #Thalapathy64 🔥 #VJSjoinsThalapathy64 #Summer2020@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @SonyMusicSouth pic.twitter.com/JyFFosIVbj
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019We are overwhelmed and excited to have our versatile star, '#MakkalSelvan’ @VijaySethuOffl sir on board for #Thalapathy64 🔥 #VJSjoinsThalapathy64 #Summer2020@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @SonyMusicSouth pic.twitter.com/JyFFosIVbj
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019
சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் விஜயுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. டிசம்பர் மாதம் விஜய் சேதுபதி இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
Get ready for major announcements from Team #Thalapathy64 for the next 3 Days. Every evening at 5 PM starting from Today!
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Get ready for major announcements from Team #Thalapathy64 for the next 3 Days. Every evening at 5 PM starting from Today!
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019Get ready for major announcements from Team #Thalapathy64 for the next 3 Days. Every evening at 5 PM starting from Today!
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019
இந்த படம் குறித்து 3 நாட்களுக்கு தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகும் என அறிவித்திருந்த தயாரிப்பு நிறுவனம், முதல் அப்டேட்டாக விஜய் சேதுபதி இதில் நடிப்பதை உறுதி செய்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இதுபற்றிய அப்டேட்டுகள் வெளியாகவுள்ளன. விஜய் ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கறிக்கடை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ரசிகர்கள்!