ETV Bharat / sitara

'மீ டூ' ஒருங்கிணைப்புக் குழுவிற்கான முதல் ஆலோசனைக் கூட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள 'மீ டூ' ஒருங்கிணைப்புக் குழுவிற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

'மீடு' ஒருங்கிணைப்புக் குழுவிற்கான முதல் ஆலோசனைக் கூட்டம்!
author img

By

Published : Apr 23, 2019, 8:20 PM IST

Updated : Apr 23, 2019, 8:25 PM IST

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை 'மீ டூ' மூலம் உலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர். இதில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த புகார் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளும் மீ டூ குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் திரைக் கலைஞர்கள் சுதந்திரமாக செயல்பட, அவர்களின் பாதுகாப்புக் கருதி ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.

இதைத்தொடர்ந்து, ஒன்பது பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை தென்னிந்திய நடிகர் சங்கம் அமைத்துள்ளது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் அமைந்துள்ள இந்தக் குழுவில் விஷால், கார்த்தி, பூச்சி முருகன், குஷ்பு, ரோகிணி, சுஹாசினி ஆகியோருடன் சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த 'மீ டூ' ஒருங்கிணைப்புக் குழுவிற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன்,லலிதா குமாரி, நடிகை சுஹாசினி, ரோகிணி, நடிகர் கிட்டி, பொருளாளர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 'மீடூ' ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடை பெற்றது.

கடந்த சில மாதங்களாக மீடூ விவகாரம்  திரைத்துறை சார்ந்த பிரபலங்களை மீது புகார்கள் எழுந்தன. தமிழ்த் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த புகார், பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. மேலும், அமலா பால் உள்ளிட்ட சில நடிகைகளும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதை தொடர்ந்து கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும் அவர்களின்  பாதுகாப்பு தொடர்பாக  ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து  நடிகர் சங்கத்தில் அச்சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில்  விசாகா கமிட்டி என்கின்ற பெயரில்  'மீடூ' ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைத்துள்ளது . நாசர் தலைமையில் அமைந்துள்ள இந்த குழுவில்  விஷால், கார்த்தி, பூச்சி முருகன், குஷ்பு, ரோகிணி, சுஹாசினி ஆகியோருடன்  சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மொத்தம்  9 பேர் கொண்ட குழுவாக 'மீடூ' ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடிகர் சங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு, மதிப்பீடு மற்றும் சுய கௌரவம், பாதுகாப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குழு அமைப்பாளர்கள் நடிகர்சங்க செயற்குழு உறுப்பினற்கள் பூச்சிமுருகன்,லலிதாகுமாரி,நடிகை சுஹாசினி,ரோகிணி,நடிகர் கிட்டி,பொருளாளர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் கலந்து கொண்டனர் . 

Last Updated : Apr 23, 2019, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.