நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் 'மாநாடு' திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். பொலிட்டிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துவருகிறார். இதில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மெகெரசைலா' பாடல் வெளியாகி சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஓசூரில் உள்ள சிறிய ரக விமான நிலையத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது. மேலும் படப்பிடிப்பு இன்று அல்லது நாளைக்குள் முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
#Maanaadu on-location! 🎬#SilambarasanTR @SilambarasanTR_ @kalyanipriyan @vp_offl @iam_SJSuryah @thisisysr @sureshkamatchi @silvastunt @johnmediamanagr pic.twitter.com/B0LNrM7CVO
— SilambarasanTR 360° (@STR_360) July 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Maanaadu on-location! 🎬#SilambarasanTR @SilambarasanTR_ @kalyanipriyan @vp_offl @iam_SJSuryah @thisisysr @sureshkamatchi @silvastunt @johnmediamanagr pic.twitter.com/B0LNrM7CVO
— SilambarasanTR 360° (@STR_360) July 9, 2021#Maanaadu on-location! 🎬#SilambarasanTR @SilambarasanTR_ @kalyanipriyan @vp_offl @iam_SJSuryah @thisisysr @sureshkamatchi @silvastunt @johnmediamanagr pic.twitter.com/B0LNrM7CVO
— SilambarasanTR 360° (@STR_360) July 9, 2021
'மாநாடு' திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜையன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'மங்காத்தா' படத்தைவிட, 'மாநாடு' படத்தின் பட்ஜெட் பெரியது எனப் படக்குழு கூறியதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: வாத்தியாரை நினைவுகூர்ந்த கமல்