ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). இதில் ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan), பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது.
பலதரப்பினர் பாராட்டு
இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் (CM Stalin), கமல் ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
அதிகாரத்தை எதிர்த்துச் சட்டப் போராட்டம் மூலம் எவ்வாறு நீதி நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சூர்யா
இருப்பினும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக சில காட்சிகளும், பெயரும் உள்ளதாக கூறி அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை சூர்யாவிற்கு எழுதியிருந்தார். இதையடுத்து சூர்யாவிற்கு வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பல நிர்வாகிகள் நெருக்கடியையும் எச்சரிக்கையும் விடுத்த வண்ணம் உள்ளனர்.
திரைப் பிரபலங்களான பா. இரஞ்சித், அமீர் உள்ளிட்டோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து '#WeStandWithSuriya' என்னும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
-
No one can be made to feel lesser for doing the right thing#Jaibheem. Suriya is one star who is redefining stardom. pic.twitter.com/BUdjw6v0g1
— Vetri Maaran (@VetriMaaran) November 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">No one can be made to feel lesser for doing the right thing#Jaibheem. Suriya is one star who is redefining stardom. pic.twitter.com/BUdjw6v0g1
— Vetri Maaran (@VetriMaaran) November 16, 2021No one can be made to feel lesser for doing the right thing#Jaibheem. Suriya is one star who is redefining stardom. pic.twitter.com/BUdjw6v0g1
— Vetri Maaran (@VetriMaaran) November 16, 2021
இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஜெய் பீம்' படத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலைய உலகறியச் செய்ய வேண்டும் என்று இயக்குநர் த.செ ஞானவேலின் பொறுப்புணர்வும், சமூக நீதியை நிலை நிறுத்துவதில் திரையிலும் நிஜத்திலும் நடிகர் சூர்யா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.
ஜெய் பீம் - சமூக நீதி ஆயுதம்
இத்தகைய படங்கள், சமூக நீதி ஏற்படக் கூடாது என விரும்புவோருக்குப் பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. சமூகத்தில் நிலவும் பேதங்களையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் 'ஜெய் பீம்' படக்குழுவுடன் எப்போதும் துணை நிற்போம்.
சரியான விஷயத்தைச் செய்வதற்காக யாரும் தாழ்வாக உணரும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது. நடிகர் சூர்யா, ஒரு திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார்.
வெற்றிமாறன் பதிவை ரீ-ட்வீட் செய்த இயக்குநர் லேகேஷ் கனகராஜ், சூர்யா, 'ஜெய் பீம்' படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம் என கூறியுள்ளார். சூர்யாவை வைத்து வெற்றிமாறன் 'வாடிவாசல்' என்னும் படத்தை விரைவில் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஜெய்பீம்' படக்குழுவினருடன் எப்போதும் நான்.. இயக்குநர் அமீர்