கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இயக்குநர் தாமிரா (52) சிகிச்சைப் பலனின்றி இன்று (ஏப்ரல் 27) உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தாமிரா மறைவுக்கு முன்பாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை.
என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க: ’நினைவுகளில் வாழ்வதுதானே மனித இனம்’