2009ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன்.
வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'ராஜபாட்டை', 'ஆதலால் காதல் செய்வீர்', 'கென்னடி கிளப்' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.
இவர் 2010ஆம் ஆண்டு கொடுமுடியை சேர்ந்த ரேணுகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தர்ஷன், ஹெர்சன் என்று இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இயக்குநர் சுசீந்திரன் நேற்று தனது 10ஆவது திருமண நாளை சொந்த ஊரில் உறவுகளோடு கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினார். அதோடு தனது மனைவிக்கு முதல்முறையாக ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'எனது அன்பு மனைவி ரேணுகாவிற்கு முதல் மடல். உனக்கும் எனக்கும் திருமணம் நடந்து இன்றோடு பத்து வருடங்கள் நிறைவடைந்து உள்ளது... கடவுளுக்கு நன்றி... ரேணு உன்னுடன் நான், என்னுடன் நீ இந்த பத்து வருடங்களின் அடையாளமாக நம் மகன்கள் தர்ஷன் ஹெர்சன் நம் அன்பின் அடையாளங்கள்... அன்பான, அளவான, அழகான வாழ்க்கை... என்னுடைய வெற்றி, தோல்வி, சந்தோஷம், துக்கம், ஏமாற்றம், வலி இப்படி என்னுடைய அனைத்து நேரங்களிலும் என்னுடன் பகிர்ந்து கொண்டாய், நானும் உனக்கு அப்படித்தான் என்று நினைக்கிறேன். மீதி உன்னுடன் நான் வாழப்போகிற காலங்களும் என்னுடன் நீ வாழப்போகும் காலங்களும் இணைந்து வாழ்வோம்... புரிந்து வாழ்வோம்' என்று எழுதியுள்ளார்.
இதையும் படிங்க... கிரிக்கெட்டோ, கபடியோ வடசென்னையில் பிரபலம் கிடையாது