தமிழில் 'தளபதி', 'ரோஜா', 'இருவர்' உள்ளிட்டப் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், சந்தோஷ் சிவன்.
இவரது தந்தை சிவன் மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். 1972ஆம் ஆண்டு வெளியான 'சொப்ணம்' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குநராக இவர் அறிமுகமானார்.
தொடர்ந்து யாகம், கொச்சு கொச்சு மோகங்கள், ஒரு யாத்ரா, அபயம் உள்ளிட்டப் பல படங்களை இயக்கியுள்ளார்.
அரசின் முதல் பத்திரிகை புகைப்படக்காரரும், கேரள சினிமாவின் பிரபல புகைப்படக் கலைஞருமான இவர், இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இவர் இயக்கிய படங்களில் 'செம்மீன்' குறிப்பிடத்தக்க திரைப்படம் ஆகும்.
சிவனுக்கு நேற்று (ஜூன்.23) உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சிவன் காலமானார்.
சிவனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் மகன்கள் சந்தோஷ் சிவன், சஞ்சீவ் சிவன், சங்கீத் சிவன் ஆகியோர் சினிமாவில் பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்மாடியோவ்! ஒரு மீனால் லட்சாதிபதியான மீனவர்கள்