தமிழ் சினிமாவில் சின்ன கலைவானர் என்று அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் மறைவையொட்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விவேக் மறைவு குறித்து இயக்குநர் ஷங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், “இன்று நாம் ஒரு அற்புதமான நடிகரையும், அற்புதமான மனிதனையும், இயற்கையின் காதலனையும் இழந்து விட்டோம்.
பத்ம ஸ்ரீ விவேக் எனது படங்களுக்கும், சமூகத்துக்கும் அளித்த பங்களிப்புகளை அளவிட முடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அருமை நண்பரை இழந்துவிட்டேன் - நாசர் இரங்கல்