தமிழ் சினிமா ரசிகர்களின் இதுவரை நிறைவேறாத ஆசையென்றால் அது செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான். அதையடுத்து 'புதுப்பேட்டை' திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களின் நிறைவேறாத ஆசையாகவே இருந்துவருகிறது.
அந்த வகையில் செல்வராகவன் நடிகர் தனுஷுடன் புதிய படத்தில் இணையப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு புறம் அந்தப் படம் 2006ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'புதுப்பேட்டை' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்த செல்வராகவன், கதை எழுதும்போது அனைத்து துப்பாக்கிகளும் பற்றி எரியும், ஏனென்றால் ஒரு படம் அங்கேதான் உருவாகிறது என்று குறிப்பிட்டார்.
-
Go all guns blazing during writing the film. Because the movie is totally made there.
— selvaraghavan (@selvaraghavan) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Go all guns blazing during writing the film. Because the movie is totally made there.
— selvaraghavan (@selvaraghavan) February 24, 2020Go all guns blazing during writing the film. Because the movie is totally made there.
— selvaraghavan (@selvaraghavan) February 24, 2020
இதையடுத்து இது அவரின் 'புதுப்பேட்டை' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்: #13yearsofpudhupettai