செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஆயிரத்தின் ஒருவன்’.
இப்படம் வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் ஆகியும், இன்றும் கூட பலரது விருப்ப பட்டியலில் இடம்பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற இப்படம், வெளியான சமயத்தில் கொண்டாடப்படவில்லை என்றாலும், பின்னாள்களில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் குறித்த ரகசியத்தை செல்வராகவன் முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
அதில், "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான ஒட்டுமொத்த பட்ஜெட் 18 கோடி ரூபாய் தான். இப்படத்தைப் பிரம்மாண்ட படமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக 32 கோடி என அறிவிக்க முடிவு செய்தோம்.
இது எவ்வளவு பெரிய முட்டாள் தனமான முடிவு! இம்முடிவால் உண்மையான பட்ஜெட் தொகையை அப்படம் வசூலித்தபோதிலும், அப்படம் சராசரி வசூல் செய்த படமாகவே கருதப்பட்டது.
இதன்மூலம் என்ன முரண்பாடு இருந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல்ல ட்விட்டர், இப்போ இன்ஸ்டா... சோகத்தில் கங்கனா!