கதை திருட்டும், தமிழ்சினிமாவும் பிரிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. எந்த படம் வெளியானலும் இது என்னுடைய கதை என்று யாரோ ஒருவர் புகார் அளிப்பதும், வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போது தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெங்கட் பிரபு மீது இயக்குநர் ஒருவர் கதை திருட்டு புகார் வைத்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் இயக்குநர் சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
You've been warned! #LiveTelecast from Feb 12 only on @DisneyplusHSVIP now watch the https://t.co/Li2V64GGnU#aVPseries @MsKajalAggarwal @actor_vaibhav @anandhiactress @premgiamaren @rajeshyadavdop @venkatraj11989 @aishwarya12dec @subbu6panchu @danielanniepope
— venkat prabhu (@vp_offl) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">You've been warned! #LiveTelecast from Feb 12 only on @DisneyplusHSVIP now watch the https://t.co/Li2V64GGnU#aVPseries @MsKajalAggarwal @actor_vaibhav @anandhiactress @premgiamaren @rajeshyadavdop @venkatraj11989 @aishwarya12dec @subbu6panchu @danielanniepope
— venkat prabhu (@vp_offl) January 29, 2021You've been warned! #LiveTelecast from Feb 12 only on @DisneyplusHSVIP now watch the https://t.co/Li2V64GGnU#aVPseries @MsKajalAggarwal @actor_vaibhav @anandhiactress @premgiamaren @rajeshyadavdop @venkatraj11989 @aishwarya12dec @subbu6panchu @danielanniepope
— venkat prabhu (@vp_offl) January 29, 2021
இதுகுறித்து சசிதரன் கூறியதாவது, " வெங்கட்பிரபு 2005ஆம் ஆண்டில் இருந்தே எனக்கு பழக்கம். அவர் கேபிட்டல் பிலிம்ஸ் சரணுக்காக ஒரு கதை கேட்டார். வெங்கட்பிரபு இயக்குவதற்காக ஹாரர் கதை ஒன்றை நான் முழு மூச்சாக அமர்ந்து உருவாக்கி முடித்தேன். அதன்பிறகு மொத்த டீமையும் அழைத்து நான் உருவாக்கிய கதையின் முழு ஸ்கிரிப்டையும் படித்துக் காட்டினேன். கதை அனைவருக்குமே பிடித்துவிட்டது. தயாரிப்பாளர் எஸ்பிபி சரணுக்கு கதை பிடித்திருந்தாலும், அதை படமாக எடுக்க அதிக செலவாகும் என்பதாலும், வெங்கட்பிரபுவை நம்பி அவரது முதல் படமாக அவ்வளவு ரூபாய் செலவு செய்ய முடியாது என்றும் கூறினார்.
பின்னர் வெங்கட்பிரபுவுவோ, தெருவோர கிரிகெட் என்கிற வார்த்தை மட்டுமே தன்னிடம் உள்ளது அதை வைத்து மேற்கொண்டு என்ன செய்வது என்று மீண்டும் என்னிடமே கேட்க, சரண் எனக்கு இயக்குநர் வாய்ப்பு அளிக்கிறேன் என்று சொன்னதை மட்டுமே நம்பி, தெருவோர கிரிக்கெட் என்ற புள்ளியை வைத்து மீண்டும் நான் 'சென்னை -28' படத்திற்கான முழு கதை, திரைக்கதையையும் தயார் செய்து வசனத்தையும் எழுதினேன். அந்த படத்தில் இடம் பெற்ற நடிகர் ஜெய்யின் கதாபாத்திரம், எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் தான். அப்படி என் திறமை அனைத்தையும் கொட்டி எழுதிய கதை தான் 'சென்னை-28'.
மொத்த படத்தின் கதையை எழுதி முடித்து அவர்களிடம் கொடுத்ததும், அதன்பின் வந்த நாட்களில் வெங்கட்பிரபுவும் எஸ்பிபி சரணும் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால் அந்தப்படத்தில் நான் பணிபுரிவதையே அவர்கள் விரும்பவில்லை. ஒருகட்டத்தில் அந்த படத்தில் இருந்து நானே விலகுவதாக கூறி வெளியேறி வந்துவிட்டேன்.
அதன்பிறகு அட்டகத்தி தினேஷை வைத்து தற்போது ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளேன். சென்சார் பணிகள் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் ஹாட்ஸ்டார் விளம்பரத்தில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற பெயரில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸின் டீசரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் சரவணன், சரண் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதற்காக நான் எழுதிக் கொடுத்து, பட்ஜெட் காரணமாக ஒதுக்கி வைத்த அதே ஸ்கிரிப்ட்டைத் தான் தற்போது'லைவ் டெலிகாஸ்ட்' என்கிற வெப் சீரியஸாக வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.
கடந்த 2007லேயே, இந்த கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளேன். அந்தக் கதைக்கும் கூட 'நேரடி ஒளிபரப்பு' என்று டைட்டில் வைத்தே பதிவு செய்துள்ளேன். தற்போது அதையே ஆங்கிலத்தில் 'லைவ் டெலிகாஸ்ட்' என்கிற பெயரிலேயே வெப்சீரிஸாக வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். என் பெயரில் அந்தக்கதை இருக்கும் போது, என்னிடம் அனுமதி பெறாமலேயே, எனக்கு தெரியாமலேயே வெங்கட்பிரபு இவ்வளவு துணிச்சலாக அதை வெப் சீரிஸாக இயக்கி இருக்கிறார் என்றால் அதற்கு பின்னணியில் இன்னொரு வலுவான காரணமும் இருக்கிறது.
கடந்த 2007-ல் சென்னை விருகம்பாக்கத்தில் நான் குடியிருந்தபோது, என்னுடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பல பொருட்கள் எரிந்து நாசமானாலும், நான் எழுதி வைத்திருந்த எண்பதுக்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய பெட்டி அதிர்ஷ்டவசமாக தப்பியது. பெரிய அளவில் சேதாரம் இல்லாமல் என்னுடைய கதைகளும் தீயிலிருந்து தப்பின.
இந்த தீ விபத்து குறித்து எப்படியோ கேள்விப்பட்ட வெங்கட்பிரபு, மறுநாள் என்னிடம் அது குறித்து விசாரித்து விட்டு, அப்படியே பேச்சுவாக்கில் என் கதைகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்றும் கேட்டார். நான் அவையெல்லாம் தீயில் எரிந்து விட்டன என்று கூறினேன். அதை கேட்டுக்கொண்ட வெங்கட்பிரபு, அதன்பிறகு என்னிடம் தொடர்பு கொள்ளவே இல்லை. இப்போது தான் எனக்கு தெரிகிறது, என்னுடைய கதைகள் எரிந்து விட்டது என்கிற தைரியத்தில் தான், வெங்கட்பிரபு ‘நேரடி ஒளிபரப்பு’ கதையை வெப்சீரிஸாக தற்போது எடுத்துள்ளார். வெங்கட்பிரபுவுக்கு இது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி.
என்னுடைய ‘நேரடி ஒளிபரப்பு’ கதையைத்தான் வெப் சீரிஸாக இயக்குவதற்காக 'வி கோஷ் மீடியா' என்கிற நிறுவனத்துடன் பேசி, கடந்த அக்டோபர் மாதம், அதற்காக முன்பணமும் வாங்கியுள்ளேன். இந்த நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை தெரியவந்துள்ளது. இதுகுறித்து நான் எழுத்தாளர் சங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். விரைவில் நேரில் சென்று அவர்களிடம் பேச இருக்கிறேன். எனக்கான நியாயத்தை சங்கத்தின் மூலமாக பெற முயற்சி எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.
சசிதரன் 'அட்டகத்தி' தினேஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் 'வாராயோ வெண்ணிலாவே' என்கிற படத்தை இயக்கி முடித்து தற்போது 'பிக்பாஸ்' புகழ் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்கிய வருகிறார். சசிதரன், வெங்கட்பிரபு மீது கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.