இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’. அடல்ட், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் ஜெயக்குமாரே நாயகனாகவும் நடித்திருந்தார்.
இவருடன் அக்ரிதி சிங், டேனியல், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் ’டிக்டிக்டிக்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டிக்டிக்டிக் படத்தை பார்த்தால் கூசாத கண்கள், இப்போ மட்டும் கூசிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த ட்வீட் சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது சந்தோஷ் இந்தப் பதிவிற்கு மன்னிப்புக் கோரும் விதமாக செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "'இரண்டாம் குத்து' படத்தை இயக்கி நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள் டீசருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையை படித்துவிட்டு கனத்தின் வெப்பத்தில் எனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இது செய்திருக்கக்கூடாது என்று மனம் கூறியது.
ஆகவே நான் போட்டுட்டு ட்வீட்டிற்கு வரும் தெரிவிக்கிறேன். தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா. அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்து விட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகின்றார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார்.
அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது. இதற்கு அடுத்துவரும் போஸ்டர்கள், அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
'இரண்டாம் குத்து': அவசரத்தில் அப்படி பண்ணிட்டேன் மன்னிப்புக் கோரிய சந்தோஷ் - பாரதிராஜாவிடம் மன்னிப்புக் கோரிய இயக்குனர்
சென்னை: 'இரண்டாம் குத்து' விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவிடம் மன்னிப்புக் கோரும் வகையில் சந்தோஷ் ஜெயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
!['இரண்டாம் குத்து': அவசரத்தில் அப்படி பண்ணிட்டேன் மன்னிப்புக் கோரிய சந்தோஷ் இயக்குனர் சந்தோஷ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:52:57:1602343377-santhosh-kumar-2-1010newsroom-1602343360-636.jpg?imwidth=3840)