நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து இயக்கிய 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தின் மூலம் ரவிக்குமார் பிரபலமானார். அந்தப் படம் டைம் மிஷின் படங்களிலேயே வித்தியாசமான படமாக வெளியாகி வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.
இந்நிலையில், ரவிக்குமாரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். இதனை இயக்குநர் ரவிக்குமாரின் நண்பரும் 'மரகத நாணயம்' படத்தின் இயக்குநருமான ஏ.ஆர்.கே. சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்குத் திரைப் பிரபலங்கள பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.