ஜம்பாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொண்ணு மாப்பிள்ளை'. இத்திரைப்படமானது காலத்துக்கு ஏற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் வெற்றி பெற நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பதினாறும் (Collection) பெற்று தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர். லிங்கதுரை பெருவாழ்வு வாழ வாழ்த்துகள். இத்திரைப்படம் கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரனுக்கும் ஒரு வெற்றிப்படமாக அமையட்டும்” என வாழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து நடிகர் பார்த்திபன் படத்தை வாழ்த்தியிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என படத் தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி தெரிவித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற டிசம்பரில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரின் ஏரியாவில் குடியேறும் லேடி சூப்பர்ஸ்டார்!