ETV Bharat / sitara

'சூர்யா 40' அப்டேட்: தலைப்பு மாஸா வரும்..கொஞ்சம் டைம் கொடுங்க - இயக்குநர் பாண்டியராஜ் - சூர்யா 40 பட அப்டேட்

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் அப்டேட் குறித்து அப்படத்தின் இயக்குநர் பாண்டியராஜ் தனது சமூகவலைதளப்பக்கதில் பகிர்ந்துள்ளார்.

Suriya 40
Suriya 40
author img

By

Published : Jun 7, 2021, 9:53 PM IST

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் சூர்யாவின் 40ஆவது படமாகும். எனவே தற்காலிகமாக 'சூர்யா 40' எனப் படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. அப்போது சூர்யா கரோனா தொற்று காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அதனால் சூர்யா இல்லாத இதர காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து சூர்யா மார்ச் 18ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து 'சூர்யா 40' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இதற்கிடையில், கரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

  • #Suriya40 update
    Dear #AnbaanaFans
    35% படம் முடிஞ்சுருக்கு .
    எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த schedule Lockdown முடிஞ்சதும் start பண்ண வேண்டியதுதான் Our team Ready .
    Title Mass ah ,
    Pre Anoucement ஓட வரும் . July வரை time kodunga plz 🤗🙏 pic.twitter.com/YssRk5tvKu

    — Pandiraj (@pandiraj_dir) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இன்று ( ஜூன்.7) இயக்குநர் பாண்டியராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூகவலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் பலரும் 'சூர்யா 40' குறித்தான அப்டேட் கேட்னர். தற்போது ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் ட்ரீட்டாக பாண்டியராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், " அன்பான ரசிகர்களே, சூர்யா 40 படப்பிடிப்பு 35 விழுக்காடு நிறைவுற்றுள்ளது. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்தக்கட்ட படிப்பிடிப்பு லாக்டவுண் முடிஞ்சதும் தொடங்கிவிடவேண்டியது தான். எங்கள் குழுவினர் தயாராக உள்ளனர். தலைப்பு மாஸா விரைவில் வரும். ஜூலை வரை எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.