ETV Bharat / sitara

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இயக்குநர் அமீர் - முதலமைச்சருக்கு நன்றி - சினிமா செய்திகள்

இயக்குநர் அமீர் தனது குடும்பத்தினருடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இயக்குநர் அமீர்.

author img

By

Published : Jun 11, 2021, 10:11 AM IST

பிரபல திரைப்பட இயக்குநர் அமீர், தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் (ஜூன். 9) ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நானும், எனது குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டோம்.

பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மிகவும் சுகாதாரமாகவும், சிறந்த உபசரிப்புடனும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இயக்குநர் அமீர்.

நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு, கோவிட் - 19 நோயிலிருந்து முழுவதுமாக விடுபடுவோம். வளமான, ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயக்குநர் அமீர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது தொடர்பான புகைப்படம், காணொளி ஆகியவையும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையும் படிங்க : என்னது மீண்டும் திருமணமா?- வனிதா விஜயகுமார் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.