இந்தி திரையுலகின் தேவதாஸாக அறியப்பட்ட பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், இன்று (ஜூலை 7) காலை காலமானார். அவருக்கு பாலிவுட் பிரபலங்களும், எண்ணற்ற ரசிகர்களும், நேரில் சென்றும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திலீப் குமாரின் மிகப் பெரும் ரசிகராக என்றுமே வெளிப்படுத்தி அவரை ரசித்து வந்துள்ள நடிகர் ஷாருக் கான், அவரது வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து, திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானுவுக்கு ஆறுதல் தெரிவித்து வந்துள்ளார்.
மகன் போன்ற ஷாருக்
முன்னதாக ஷாருக் கான் பல மேடைகளிலும் தான் எவ்வளவு தீவிர திலீப் குமார் ரசிகர் என்பதை வெளிப்படுத்தியே வந்துள்ளார். திலீப் குமாரும் ஷாருக்கானுடன் இணக்கமாக நட்பு பாராட்டி வந்துள்ளார்.
திலீப் குமாரின் மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு, தங்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்தால் அவர் நிச்சயம் ஷாருக்கான் தோற்றத்தில் தான் இருந்திருப்பார் என பல முறை குறிப்பிட்டு அகமகிழ்ந்துள்ளார்.
தேவதாஸாக கலக்கிய திலீப் குமார், ஷாருக் கான்
கல்ட் கிளாசிக் கதாபாத்திரமான ’தேவதாஸ்’ மூலம் திலீப் குமார் 60களில் பெரும்புகழ் அடைந்த நிலையில், 2000ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்ட தேவதாஸின் மறுபதிப்பில் ஷாருக் கான் தேவதாஸாகத் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திலீப் குமார் மறைவு: பெரும் சோகத்தில் 'பாலிவுட் பிக் பி'