ETV Bharat / sitara

எனக்கு இவரை போன்று நடனமாட ஆசை: 'சில் ப்ரோ' தனுஷ்!

சில் ப்ரோ பாடலுக்கு நடனமாடிய சாந்தனு - கீர்த்தியை நடிகர் தனுஷ் ட்வீட்டரில் வாழ்த்தியுள்ளார்.

author img

By

Published : Dec 18, 2019, 8:17 PM IST

chill bro
chill bro

‘கொடி’ படத்துக்குப் பிறகு துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதிலும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷூடன் சினேகா, மெஹ்ரின் பிர்ஸடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'மாரி', 'அனேகன்', 'மாரி 2' படங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இதில் தனுஷுடன் இணைந்துள்ளார். விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. சமீபத்தில் வெளியான சில் ப்ரோ சிங்கிள் ட்ராக் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் இப்பாடலுக்கு நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி, தொகுப்பாளினியுமான கீர்த்தியும் நடனமாடினர். இவர்களின் நடனத்தை சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். பதிவிட்ட சில மணி நேரத்திலேயே ரசிகர்கள் இதை அதிகம் லைக் செய்தும் ஷேர் செய்தும் வந்தனர். இதனையடுத்து இந்த வீடியோவை பார்த்த நடிகர் தனுஷ், சாந்தனுவும் கீர்த்தியும் சில் ப்ரோ பாடலுக்கு ஆடிய வீடியோ பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு சாந்தனுவை போன்று நடனமாட ஆசை என்று பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

https://twitter.com/dhanushkraja/status/1207227188585517057

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.