'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படமான இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நிறைவடைந்த நிலையில், 2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம், ஊரடங்கு உத்தரவு காரணமாகத் தள்ளிப்போனது.
-
Suruli oda aatatha paaka naanga ready! Neenga ready ah?#JagameThandhiram coming on 18th June.@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/I6Q2UF4a3g
— Netflix India (@NetflixIndia) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Suruli oda aatatha paaka naanga ready! Neenga ready ah?#JagameThandhiram coming on 18th June.@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/I6Q2UF4a3g
— Netflix India (@NetflixIndia) April 27, 2021Suruli oda aatatha paaka naanga ready! Neenga ready ah?#JagameThandhiram coming on 18th June.@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/I6Q2UF4a3g
— Netflix India (@NetflixIndia) April 27, 2021
இந்த நிலையில், இப்படத்திலிருந்து வெளியான 'ரகிட ரகிட', 'புஜ்ஜி' பாடல்கள் சமூக வலைதளத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இப்படத்தின் டீசரில் மதுரையில் ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக சுருளி கதாபாத்திரத்தில் வரும் தனுஷ், லோக்கல் டானாக இருந்து இன்டர்நேஷனல் டானாக மாறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது இப்படம் குறித்தான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
கரோனா பரவல் காரணமாக இந்தப் படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் ஜூன் 18ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.