ETV Bharat / sitara

'நான் ருத்ரன்' பட பணிகள் தொடக்கம்? - தனுஷ் தரப்பு விளக்கம்! - Kollywood news

'நான் ருத்ரன்' மீண்டும் தொடங்க வாய்ப்பு இல்லை தனுஷ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

தனுஷ்
தனுஷ்
author img

By

Published : Jun 11, 2020, 12:24 AM IST

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நாகர்ஜூன், ஸ்ரீகாந்த், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நான் ருத்ரன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்தப் படத்தில் தனுஷூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் காரணமாக ஏற்பட்ட பிரச்னையால், படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து தனுஷ் தரப்பில் தொடர்பு கொண்டபோது, "ஊடகங்களில் வரும் செய்தி அனைத்தும் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்கள்தான்.

ஏற்கனவே இந்த படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயர் வைக்கப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் பைனான்ஸ் காரணமாக கைவிடப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த படத்தை மீண்டும் தொடர்வது என்பது இயலாத காரியம், ஏனென்றால் இந்தப் படத்தில் மிகப்பெரிய பிரபலங்கள் நடிக்கவிருந்தினர். மீண்டும் அவர்களை ஒருங்கிணைப்பது என்பது ஒரு கேள்விக்குறியான விஷயம்.

அதேபோன்று தயாரிப்பு தரப்பில் இந்த படம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது தவறானது” என விளக்கமளிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.