ETV Bharat / sitara

பிரபுதேவாவின் 'தேவி-2' ரிலீஸ் தேதி அறிவிப்பு! - இயக்குநர் விஜய்

பிரபுதேவா- தமன்னா நடிப்பில் வெளியாகவிருக்கும் 'தேவி-2' படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

poster
author img

By

Published : Mar 13, 2019, 1:29 PM IST

ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் 'தேவி 2'. பிரபுதேவா, தமன்னா, நந்திதா, ஸ்வேதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறியதாவது,

கோடை விடுமுறை நேரத்தில் குடும்பமாக தியேட்டர்களுக்கு வந்து படங்களை பார்ப்பர். அப்போது பொழுதுபோக்கு படங்களையே அதிகம் ரசிக்கிறார்கள். 'தேவி 2' படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் கமர்சியல் விசயங்கள் உள்ளன.

பிரபுதேவா எனர்ஜி அபாரமானது. முதல் பாகம் போலவே இப்படத்திலும் அனைவரையும் ஈர்ப்பார். தமன்னா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் அவரது நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த இரண்டாம் பாகத்திலும் அதை விட சிறப்பாக நடித்துள்ளார்.

படக்குழுவில் உள்ள அனைவரும் கொடுத்த சிறந்த பங்களிப்புதான் குறுகிய காலத்தில் படத்தை முடிக்க முடிந்தது. இந்த கோடைகாலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் 'தேவி 2' இருக்கும், என்றார்.

Intro:Body:

CINEMA 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.