ETV Bharat / sitara

'சின்ன தல' சுரேஷ் ரெய்னாவிற்கு தோள் கொடுக்கும் சூர்யா!

சென்னை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தில் ஏற்பட்ட துயரத்தில் பங்கு கொள்கிறோம் என நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

சூர்யா
சூர்யா
author img

By

Published : Sep 1, 2020, 6:51 PM IST

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தன்னுடைய உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தான் சுரேஷ் ரெய்னா அறிவித்தார்.

இதனையடுத்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், 'பஞ்சாபில் என் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை எனக்குத் தெரியாது. எனது மாமா அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். என் அத்தை, அவரது மகன்கள் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனது அத்தையும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

ஆனால், இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதும், யார் இதனைச் செய்தது என்பதும் எங்களுக்குத் தெரியாது. இதனை பஞ்சாப் காவல் துறைதான் விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில், இதுபோன்று அவர்கள் இன்னொரு குற்றச் செயலில் ஈடுபடக்கூடாது' என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு நடிகர் சூர்யா, அன்புள்ள ரெய்னாவுக்கு, உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உங்கள் வருத்தத்தில் நாங்கள் அனைவரும் பங்கு கொள்கிறோம். இரக்கமற்ற அந்த குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். உங்கள் குடும்பத்தினரின் வலிமைக்கும் அமைதிக்கும் எனது பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.