இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா, சென்னையில் உள்ள லீலா பேலஸில் தற்போது நடைபெற்று வருகிறது. மாலை நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், விஜய் குடும்பமும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள தொகுப்பாளர் தீனா, ''எங்க அம்மா, அப்பாவுக்கு நான் பெரிய உயரத்துக்கு போகணும்'னு ஆசை. இதவிட பெரிய மேடைக்கு போவேனான்னு தெரியல. வாய்ப்பு கொடுத்த லோகேஷுக்கு நன்றி.
ஆடியோ லான்ச்சே படம் ரிலீஸ் மாதிரி இருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் விஜய் சார் தான். ஈ.சி.ஆர் சாலை காலியாக இருக்கிறது என்பதற்காக அடிக்கடி ரைடு போகாதீங்க என்று கூறிவிட்டு, தான் பைக் ரைடு பற்றி தான் கூறினேன்" என்று வழக்கம் போல் கலகலப்பாகப் பேசி பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'கருப்பு கோட் சூட்'- மாஸ்டர் இசை விழாவுக்கு மாஸாக எண்ட்ரி கொடுத்த விஜய்!