ETV Bharat / sitara

சின்மயியை நீக்கியதற்கு தடை: டப்பிங் யூனியனுக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி - ராதாரவி

பாடகி சின்மயியை, டப்பிங் கலைஞர் சங்கத்திலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

சின்மையை நீக்கியதற்கு தடை: டப்பிங் யூனியனுக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
author img

By

Published : Mar 18, 2019, 9:35 AM IST

திரைத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து மீடூமூலம் பாடகி சின்மயி சமூக வலைதளங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்தார். இதன் எதிரொலியாக சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக சந்தா செலுத்தாததால் சின்மயியை நீக்கியதாக சங்கம் விளக்கமளித்தது.

2006ஆம் ஆண்டிலிருந்து சங்கத்துக்கான நுழைவுக் கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தி வருவதாகவும், 2018ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் தெரிவித்த சின்மயி, சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக சென்னை இரண்டாவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.முருகேசன் சின்மயியை சங்கத்திலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ராதாரவி மார்ச் 25ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

Intro:Body:

https://www.dinamani.com/tamilnadu/2019/mar/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3115678.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.