திருச்சியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனராக இருந்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், 'கடந்த சில நாள்களாக ஜீ 5 வெப் சேனலில் 'காட்மேன்' என்ற வெப் சீரிஸ் தொடங்கப்போவதாக, அதன் முன்னோட்டக் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அதில் பிராமணர்கள் மட்டும்தான் வேதம் படிக்க வேண்டும் என எந்த சாஸ்திரத்தில் சொல்லி உள்ளது எனவும், எல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் என்பது போன்றும் வசனங்கள் இடம் பெற்று உள்ளன. தொடர்ந்து ஹிந்துக்கள், பிராமணர்களை திரைப்படம், வெப் சீரிஸில் இழிவுப்படுத்தி வருகின்றனர்' எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஹிந்துக்கள் குறித்து இழிவாகச் சித்தரித்து வரும் இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த வெப் சீரிஸை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க... குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் 'காட்மேன்' டீசரை தடை செய்ய கோரிக்கை