ETV Bharat / sitara

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் குறிப்பிட்டு ட்வீட்: 39 பிரபலங்கள் மீது வழக்கு!

author img

By

Published : Sep 5, 2021, 1:57 PM IST

2019ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியதாக திரைப் பிரபலங்கள் சல்மான் கான், ஹன்சிகா மோத்வானி, விளையாட்டு வீரர் ஷிகார் தவான் உள்ளிட்ட 39 பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

39 பிரபலங்கள் மீது வழக்கு
39 பிரபலங்கள் மீது வழக்கு

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர், கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ஹைதராபாத் மருத்துவர்

பணி முடிந்து இரவு வீடு திரும்பும் வழியில் டயர் பஞ்சரான நிலையில், உதவியை எதிர்பார்த்து காத்திருந்த அப்பெண் மருத்துவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஹைதராபாத் சத்தனபள்ளி டோல்கேட் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்த நிலையில், அதற்கு முன்னதாக பெண் மருத்துவர் கலக்கத்துடன் தன் தங்கையிடம் பேசிய ஆடியோ வெளியாகி நாடு முழுவதும் மக்களை உலுக்கியது.

இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர்கள் கேசவேலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய நால்வர் அடுத்த 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி காவல் துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களைக் குறிப்பிட்டு ட்வீட்...

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சமூகக் காரணிகளை முன்வைத்து பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படக்கூடாது எனும் விதி ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதையும் படிங்க: ''காவலன் செயலி''யை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்: டிஜிபி !

இச்சூழலில், 2019ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியதாக திரைப் பிரபலங்கள் சல்மான் கான், ஹன்சிகா மோத்வானி, விளையாட்டு வீரர் ஷிகார் தவான் உள்ளிட்ட 39 பிரபலங்கள் மீது, டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கௌரவ் எனும் வழக்குரைஞர் புகாரளித்துள்ளார்.

மேலும் பிரபலங்களில் ட்வீட்களை தனது புகாரில் மேற்கோள் காட்டியுள்ள அவர், அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார். தவிர பிரிவு 228Aஇன் கீழ் சப்ஸி மண்டி காவல் நிலையத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களுக்கும் எதிராக எழுத்துப்பூர்வமாகவும் கௌரவ் புகார் அளித்துள்ளார்.

39 திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் விவரம்

இந்நிலையில், சல்மான் கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், ஃபர்ஹான் அக்தர், அனுபம் கேர், அர்மான் மாலிக், கரம்வீர் வோரா, பாலிவுட் திரைப்பட இயக்குனர் மதுர் பண்டர்கர், தெற்கு நடிகர் ரவி தேஜா, அல்லு சிரிஷ், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஷிகார் தவான், சாய்னா நேவால், நடிகை பரினீதா சோப்ரா, தியா மிர்சா, ஸ்வரா பாஸ்கர், ரகுல் ப்ரீத், ஜரீன் கான், யாமி கவுதம், ரிச்சா சதா, காஜல் அகர்வால், ஷபனா ஆஸ்மி, ஹன்சிகா மோத்வானி, பிரியா மாலிக், மெஹ்ரீன் பிர்சாடா, நிதி அகர்வால், சார் கூர், ஆஷிகா ரங்கநாத், ரேடியோ ஜாக்கி சைமா ஆகிய பாலிவுட் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பெண்களின் பாதுகாப்பிற்காக ''நம்ம மெட்ரோ''வில் பெண்காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.