தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் ஆண்டுகளில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி. இவர்களின் காம்போவில் வெளியான காமெடிகளை ரசிக்காதவர்களே இருந்திருக்க முடியாது. இதையடுத்து புது புது நகைச்சுவை நடிகர்கள் தோன்றியதால், இவர்களின் மார்கெட் சரிந்தது. பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவின், ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் செந்தில் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு நேற்று தொடங்கப்பட்டது. அதைக்கண்ட ரசிகர்கள் உடனடியாக அக்கணக்கை பின் தொடர ஆரம்பித்தனர். ட்விட்டர் கணக்கு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஐந்து ஆயரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர ஆரம்பித்தனர். ஆனால் அது போலி கணக்கு என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மக்கள் செய்தித் தொடர்பாளர் டைமண்ட் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
Fake account https://t.co/RlP18NJSiw
— Diamond Babu (@idiamondbabu) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Fake account https://t.co/RlP18NJSiw
— Diamond Babu (@idiamondbabu) May 5, 2020Fake account https://t.co/RlP18NJSiw
— Diamond Babu (@idiamondbabu) May 5, 2020
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிவேலு பெயரில், ஒரு போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கரோனா வைரஸ் குறித்து போலி தகவல்களைப் பரப்ப வேண்டாம்' - ஆயுஷ்மான் குரானா வேண்டுகோள்