‘மன்மதன்’ படத்தின் மூலம் சந்தானத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுக செய்தவர் சிம்பு. வல்லவன், வானம், வாலு என இந்த கூட்டணி இணைந்த அத்தனை படங்களிலும் காமெடி காட்சிகள் செம ஹிட். ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் கதாநாயகனான பின்பு எந்தப் படத்திலும் சந்தானம் காமெடியனாக நடிக்கவில்லை. ஆனால் தன்னை அறிமுகம் செய்த சிம்பு எப்போது கூப்பிட்டாலும் மறுக்காமல் நடிப்பேன் என சந்தானம் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதற்கான நேரம் தற்போது வாய்த்திருக்கிறது.
‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் மூலம் சிம்பு ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் சிம்பு ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்மதன், வல்லவன் படத்துக்கு பிறகு எந்தப் படங்களையும் இயக்காத சிம்பு, அடுத்த ஆண்டு ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் சந்தானத்துக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிம்பு - சந்தானம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.