ETV Bharat / sitara

’இந்தியாவில் படம் எடுத்ததில் மகிழ்ச்சி’ - கிறிஸ்டோபர் நோலன் - டெனெட் படம் வெளியாகும் தேதி

தனது படத்தின் சில காட்சிகளை இந்தியாவில் எடுத்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.

Christopher Nolan
Christopher Nolan
author img

By

Published : Dec 3, 2020, 5:25 PM IST

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், எலிசபெத் டெபிகி, பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'டெனெட்' (TENET). கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ், இப்படத்தை இணைந்துத் தயாரித்துள்ளனர்.

டைம் ரிவர்சல் (time reversal) முறையைப் பயன்படுத்தி மூன்றாம் உலகப்போரை இரண்டு சர்வதேச உளவாளிகள் தடுத்து நிறுத்துவதுதான் இந்தப் படத்தின் கதை. இதன் ட்ரெய்லர் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. கரோனா சூழல் காரணமாக தள்ளிப்போன இதன் வெளியீடு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் நாளை (டிச.04) இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில், கிறிஸ்டோபர் நோலன் தனது படம் குறித்து இந்திய ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ”இந்தியாவில் என படங்களின் சில காட்சிகள் எடுக்க முடிந்தததில் மிக மகிழ்ச்சி. இந்த படத்தில் நடித்த டிம்பிள் கபாடியா போன்ற நல்ல நடிகர்களை இந்தியா தந்துள்ளது. இந்திய ரசிகர்கள் சினிமாவை நேசிக்கின்றனர். நானும் சினிமாவை நேசிக்கிறேன். மும்பைவாசிகளுடன் பழகியது ஒரு நல்ல அனுவம் அதை நான் ரசிக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸில் பார்த்தால் புதிய அனுபவத்தைத் தரும்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.