சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் இருதய அறிவியல் பிரிவு ரேலா ஹார்ட் பீட்ஸ் என்னும் இருதய சிகிச்சை ஆதரவு குழு இன்று தொடங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகரும், டைரக்டருமான சேரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். மேலும், “இருதய சிகிச்சைக்கு பின் தங்களது தொழில்களிலும், வேலைகளிலும் மற்றும் தனிபட்ட வாழ்க்கையிலும் திறம்பட செயலாற்றிக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் தங்களை போல் உள்ளவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதற்கு இக்குழு பயன்படும்” என்றார்.
மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிறுவனத்தின் மூத்த மருத்துவர் பாலமுரளி சீனிவாசன் கூறுகையில், “இருதய சிகிச்சை மேற்கொண்டோர் தங்களது பழைய வாழ்க்கை திரும்புவதற்கு இக்குழு மிக உதவிகரமாக இருக்கும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அனுபவங்களையும் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் மற்றவர்களோடு ஒரு நல்ல சூழ்நிலையில் பகிர்ந்துக் கொள்ள இவர்கள் ஒரு பாலமாக செயல்படுவார்கள்.
இந்தக் குழுவில் இருதய சிகிச்சை செய்து கொண்ட அனைவரும் இலவசமாக சேர்ந்து கொள்ளலாம்” என்றார். மேலும் இதில் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்கும் இலவச குழுவின் உறுப்பினர் அட்டை வழங்கபட்டது.
இதையும் படிங்க: யூ-ட்யூபில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 'குட்டி ஸ்டோரி' பாடல்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!