சிறந்த தமிழப் படங்களையும், தமிழ் சினிமா கலைஞர்களை தவறாமல் அவர் பாராட்டும் பண்பும்தான் ரசிகர்கள் ஷாருக் மீது வைத்துள்ள அன்புக்கு காரணமாக உள்ளது.
கமலுடன் இணைந்து ஹேராம் படத்திலும், ரா ஒன் படத்தில் சிட்டி ரோபோவுடன் இணைந்து ஒரு காட்சியும் வைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். அதேபோல் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பல கோலிவுட் படங்களில் ரெபரன்ஸ் வைத்து தமிழ் படம் போன்று ரசிக்க வைத்தார்.
சமீபத்தில் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தை பார்த்து ரசித்து வியந்துள்ளார் ஷாருக். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனை சந்தித்து படம் குறித்து பேசியுள்ளார்.
அப்போது பின்னணியில் மழை கொட்டித் தீர்க்க ஷாருக் - வெற்றிமாறன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில், அசுரன் பட இந்தி ரீமேக்கில் ஷாருக் நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவின.
மேலும், கடந்த ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியான ஸீரோ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவல் ஏதும் வெளியிடாமல் இருந்து வருகிறார் ஷாருக்.
இதைத்தொடர்ந்து அசுரன் ரீமேக்கில் ஷாருக் - வெற்றிமாறன் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், சாதரணமாக இருவரும் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், அசுரன் படம் சிறப்பாக இருப்பதால் வெற்றிமாறனை சந்தித்து ஷாருக் பாராட்டி பேசியதாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.