'ப்ளாக் பாந்தர்' திரைப்படத்தின் நடிகை தனாய் குரிரா, இன பாகுபாடுக்கான நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும், அதற்காக போராட உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "பலர் தங்களது வாழ்நாளில் பல ஆண்டுகளை இன நீதிக்கான போராட்டத்துக்காக செலவளித்துள்ளனர். ஜெய்க்க மறுத்த ஒரு சண்டைக்காக போராட்டியிருக்கின்றனர்.
இதற்கு முன்பாக வந்தவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் மாற்றத்தை கொண்டுவரும் தருணம் இது. இந்த மாற்றத்தை கொண்டுவர என்னால் முடிந்த வகையில் நான் உதவுவேன். நான் முன்னேறிச் செல்ல இந்த சிந்தனையே எனக்கு உத்வேகம் அளிக்கிறது" என அவர் தெரிவித்தார்.
இன ரீதியான பாகுபாட்டை எதிர்த்து போராட நிலையான சீர்த்திருத்தங்களை காண தான் விரும்புவதாகவும், நமக்கு நிலையான சீர்த்திருத்தங்கள் தேவை. "நமது கலாச்சாரத்திலும், சமூகத்திலும், மொழி, பொதுத் தன்மை, அமைப்பு என அனைத்திலும் இன வெறிக்கு எதிரான கருத்து பரவ வேண்டும் என விரும்புகிறேன். அது உண்மையான நீதியை விதிவிலக்காக இல்லாமல் விதிமுறையாக்கும்" என்றார் தனாய் குரிரா.
இதையும் படிங்க... KASHISH 2020: மும்பை சர்வதேச குயர் திரைப்பட விழா