தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம்வந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் பிக்பாஸ்-2 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்று சர்ச்சைகளை சந்தித்தார். சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலத்தை பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திரைப்பட நடிகரும், பாஜகவின் உறுப்பினருமான பொன்னம்பலம், சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று (ஜூலை 12) காலை தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் பொன்னம்பலம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தோம்.

எல். முருகன் பொன்னம்பலத்தின் குடும்பத்தினரையும் சந்தித்து நலம் கேட்டறிந்ததோடு, அவரின் மருத்துவச் செலவிற்காக ரூ. 2 லட்சம் வழங்கினார். எந்த உதவி தேவைப்பட்டாலும் தயக்கமின்றி தன்னை அழைக்குமாறு பொன்னம்பலத்திடம் கூறியதோடு, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பிலும் அவர் பரிபூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்- உதவி செய்த கமல்