ETV Bharat / sitara

அடித்தது லக்... மக்கள் செல்வனுக்கு ஜோடியான பிக்பாஸ் பிரபலம்

author img

By

Published : Aug 23, 2021, 1:05 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி முதல்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் புதிய படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து படக்குழு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஷிவானி
ஷிவானி

பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த ஷிவானி கடந்த ஆண்டு நடந்துமுடிந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தார்.

காரைக்குடியில் நடைபெற்றுவரும் இப்படத்தில் கமல் ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். ராஜ்கமல், டர்மரீக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துவருகின்றன. விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அறிமுக டீசர் ஆகியவை வெளியாகி கமல் ஹாசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.