ETV Bharat / sitara

'என்னால் வேலை பார்க்க முடியாது'- பிக் பாஸ் ஜூலி

author img

By

Published : Mar 30, 2020, 9:17 AM IST

செவிலி வேலையை மீண்டும் செய்யப்போவதில்லை என்று பிக் பாஸ் ஜூலி தெரிவித்துள்ளார்.

'என்னால செவிலியர் வேலை பார்க்க முடியாது'- பிக் பாஸ் ஜூலி அதிரடி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலமானவர் செவிலி பணி செய்த ஜூலி. இதையடுத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி மூலம் எதிர்மறையாமான விமர்சனங்களை பெற்றாலும், இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது இவர் ஒரு சில படங்களில், கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில், அடிக்கடி ரசிகர்களுடன் தனது சமூக வலைதளபக்கம் மூலம் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், "உங்களின் தற்போதைய தொழில் என்ன? மீண்டும் நர்ஸ் வேலைக்கு செல்லவில்லையா?'' என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், "அனைவரும் இதைத்தான் எண்னிடம் கேட்கிறார்கள். நான் தற்போது நடிப்பில் கவனம் செலுத்துகிறேன். செவிலி தொழில் என்பது புனிதமானது. அதற்கு கடின உழைப்பும், முழு அர்ப்பணிப்பும் தேவை. பிற வேலைகளை போன்று செவிலி வேலையை, பகுதி நேரமாக செய்ய முடியாது. இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஏனென்றால் ஷூட்டிங் முடிவதற்கு சில சமயத்தில் தாமதமாகும். நோயாளிகள் காத்திருப்பார்கள். நான் நோயாளிகளின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" என்றார்.

இதையும் படிங்க: படப்பிடிப்பு ரத்து: ஓவியம் வரைந்து நேரத்தை செலவிடும் மஹிமா நம்பியார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.