ETV Bharat / sitara

BB Day 54 - மூன்றாவது வைல்ட் கார்டு நபராக நுழைந்த சஞ்சீவ் - பிக்பாஸ் தமிழ் 5

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் ஸ்டைலாக நுழைந்து மாஸ் காட்டியுள்ளார்.

சஞ்சீவ்
சஞ்சீவ்
author img

By

Published : Nov 26, 2021, 3:13 PM IST

இரண்டு நாள்களாக பிக்பாஸ் வீட்டில் பள்ளிக்கூடம் டாஸ்க் நடைபெற்றுவருகிறது. சேட்டை செய்தவர்களுக்கு வார்டன் சிபு நாள் இறுதியில் தண்டனை வழங்கிவருகிறார். அதன்படி நேற்றைய (நவ.25) டாஸ்கில் இமான், பிரியங்கா, அபிஷேக், ஐக்கி, வருண் ஆகியோருக்கு தண்டையாக வெளியே தூங்க வேண்டும் என்றார் சிபி.

அடியே அடியே இவளே பாடலுடன் தொடங்கியது நேற்றைய நிகழ்ச்சி. பிறகு நடைபெற்ற பள்ளி விழாவில் 'சிறந்த மாணவி' பட்டம் தாமரைக்கு வழங்கப்பட்டது. Tongue Twister- ஐ ராஜு கற்றுக்கொடுத்தார்.

இதில் இமான் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது பாராட்ட வேண்டிய விஷயம். வருண் பேசியது என்ன என்பது அவருக்குத் தெரியாத ஒன்று. பிரியங்கா 'கிழவி'யை கடைசி வரை கெழவி என்றார். ஐக்கி பாடலுடன் தனக்குக் கொடுத்த வாக்கியத்தைப் பாடியது சிறப்பான ஒன்றாக இருந்தது.

உங்களுக்கு பிடித்தமானவருக்குக் கடிதம் எழுதுங்கள் என்றும், அதுவெளியே செல்லும் என்றா பிக்பாஸ். அப்போது அக்ஷரா அவரது வீட்டிற்குக் கடிதம் எழுதினார். 'உங்க Little Princess' எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டே எழுந்தபோதே கண்கள் குளமானது. உடனே பிரியங்கா அவரிடம் சென்று ஆறுதல் கூறினார்.

பரிசு கொடுக்கும் தருணம் வந்தது. அனைவரும் தங்களுக்கு என்ன கொடுப்பார்கள் என ஆவலாகச் சிபி முகத்தைப் பார்த்தனர். நிரூப், சிறந்த மாணவனாகவும் விளையாட்டில் வருணுக்குக் கொடுக்கப்பட்டது. இத்துடன் ஒரு வழியாகப் பள்ளிக்கூடம் டாஸ்க் நிறைவடைந்தது. 'சும்மா இருடா டேய்' என அடுத்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. என்ன நடந்தாலும் யாரும் அதற்கு எந்த உணர்ச்சியும் வழங்கக்கூடாது என்பதே அந்த டாஸ்க்.

உடனே பிக்பாஸ் தான் வித்தைக்காரன்-ல மின்னல், இடி, சத்தம் ஆகிய எபெக்ட் எல்லாம் வரிசையாக இறக்கினார். எதையுமே கண்டுகொள்ளாத போட்டியாளர்கள் பாடல் ஒளித்தவுடன் மட்டும் வைல்ட் கார்டு எண்டிரி வருவதைத் தெரிந்து கொண்டனர்.

மிகவும் ஸ்டைலாக வந்த சஞ்சீவ் அனைவரையும் கட்டித்தழுவி அறிமுகமாகினார். வந்த உடனே அனைவரும் சொல்வதுபோல, ”டாஸ்க் எல்லாம் நல்ல இருக்கு. எல்லாரும் நல்ல விளையாட்டிட்டு வரீங்க” எனக் கதை சொன்னார்.

ஏற்கனவே பிரியங்கா, அண்ணாச்சி என இரண்டு தொகுப்பாளர் வீட்டில் இருக்கும்போது, மூன்றாவதாக அந்த லீஸ்டில் சஞ்சீவும் இணைந்திருக்கிறார். திருமதி செல்வம் மூலம் சீரியல் மூலம் கிடைத்த புகழ் இவருக்கு நாசமாகாமல் இருந்தால் போதும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

இதையும் படிங்க: BB Day 53 - எல்லைமீறிய சண்டை... பொருள்களை உடைத்த அக்ஷரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.