ETV Bharat / sitara

நான் தோற்றுவிட்டேன்: பூமி பட இயக்குநர் - ரசிகரின் கேள்வியால் பூமி பட இயக்குனர் கோபம்

ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த பூமி பட இயக்குனர் லக்ஷ்மண் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நான் தோற்றுவிட்டடேன் என்று தெரிவித்துள்ளார்.

ரசிகரின் கேள்வியால் பூமி பட இயக்குனர் கோபம்!

author img

By

Published : Jan 20, 2021, 4:13 PM IST

இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பூமி. பொங்கலை ஒட்டி 14ஆம் தேதி ஓடிடியில் வெளியான இப்படம் வெளியாகி விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்நிலையில் பூமி படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது ட்விட்டரில் இதுவரை நான் பார்த்த படங்களில் பூமி போன்ற மோசமான படத்தை பார்த்ததில்லை என்று பதிவிட்டிருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான மிக மோசமான படங்களை மேற்கோள் காட்டியது மட்டுமல்லாமல் இயக்குநர் லக்ஷ்மணுடன் பணிபுரிவதை ஜெயம் ரவி நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரசிகரின் கேள்வியால் பூமி பட இயக்குனர் கோபம்!
ரசிகரின் கேள்வியால் பூமி பட இயக்குனர் கோபம்!

இதற்கு பதிலளித்து ட்வீட் செய்த இயக்குநர் லக்ஷமண், “சார் நம்ம எதிர்கால தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்க சூப்பர் ஜெயிச்சுட்டீங்க. நான் தோத்துட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.