தமிழ் திரை உலகின் ஜாம்பவான்களான 'இசைஞானி' இளையராஜா, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா ஆகியோர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நண்பர்களான இவ்விருவரும் இணைந்த கூட்டணி, காலத்தால் அழியாத பல திரையிசைப் பாடல்களையும், படங்களையும் கொடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பிரிந்து திரை வாழ்க்கையில் தனித்தனியே பயணித்துவந்த நிலையில், இவர்களது கூட்டணி மீண்டும் ஒன்றிணையாதா என்று ஏங்குகிற ரசிகர் பட்டாளம் இங்கு ஏராளம் உண்டு.
இதனிடையே, தற்போது மனக்கசப்பு நீங்கி இருவரும் தங்களது சொந்த ஊரான தேனியில் இன்று சந்தித்துக்கொண்டுள்ளனர். காரில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "இயலும், இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது... என் தேனியில்" என்று பாரதிராஜா குறிப்பிட்டிருக்கிறார்.
-
இயலும்,இசையும், இணைந்தது ..
— Bharathiraja (@offBharathiraja) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
இதயம் என் இதயத்தை தொட்டது💕💕💕என் தேனியில்❣❣ pic.twitter.com/4Tj9SXVQ2L
">இயலும்,இசையும், இணைந்தது ..
— Bharathiraja (@offBharathiraja) November 1, 2019
இதயம் என் இதயத்தை தொட்டது💕💕💕என் தேனியில்❣❣ pic.twitter.com/4Tj9SXVQ2Lஇயலும்,இசையும், இணைந்தது ..
— Bharathiraja (@offBharathiraja) November 1, 2019
இதயம் என் இதயத்தை தொட்டது💕💕💕என் தேனியில்❣❣ pic.twitter.com/4Tj9SXVQ2L
இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருப்பதோடு, மீண்டும் திரையில் இணைவார்களா என்ற எதிர்பார்ப்புடன் ட்வீட் செய்து வருகின்றனர்.