அறிமுக இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பாக்யராஜ், ரேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘குஸ்கா’. இதில் மயில்சாமி, டிபி கஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறுகையில், ”பாக்யராஜ் சாருக்கு இந்த கதையை கேட்டதும் பிடித்துவிட்டது. தீவிர எம்.ஜி.ஆர் கதிர் என்ற கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரேகா நடித்துள்ளார். கதையில் இருவருக்கும் ஃப்ளாஷ்பேக் போர்ஷன் உள்ளது. அதில் இளமையான கதாபாத்திரத்தில் அவர்கள் இருவருமே நடித்திருக்கின்றனர். ஒரு விபத்தை மையமாக கொண்டுதான் இதன் கதை நகரும்” என்றார். தீபாவளி முடிந்தபிறகு சுடச் சுட ‘குஸ்கா’ திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.