ETV Bharat / sitara

'சுல்தான்' கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்! - sultan movie

சுல்தான் கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன் என்று அப்படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

சுல்தான்
சுல்தான்
author img

By

Published : Feb 15, 2021, 10:31 AM IST

சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் கலர்ஃபுல் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படம். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர். பிரகாஷ் பாபு, எஸ்ஆர். பிரபு தயாரித்திருக்கும் இப்படத்தினை 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

படம் குறித்து பாக்யராஜ் கண்ணன் கூறியதாவது:

"மகாபாரதத்தில் கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்றால் எப்படி இருக்கும், அந்த புள்ளிதான் இந்த படம். முழுக்கதையும் இப்பவே சொல்லிட முடியாது. படத்தை பாருங்க, உங்களுக்கு அந்த சர்ப்ரைஸ் இருந்துட்டே இருக்கும். 'நீரின்றி அமையாது உலகுனு' சொல்லுவாங்க அதேபோல் தான் உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதைதான் இந்தப்படம்.

பரபரப்பான திரைக்கதையில் காதல், காமெடி எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். கைதியோட வெற்றிக்குப் பிறகு கார்த்தி சார் கிட்ட நிறைய பொறுப்பு வந்திருக்கு. விமர்சனங்கள் அனைத்தையும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்கிறார்.

நடிகர் கார்த்தி, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்

தன்னை அதுக்கேற்றவாறு வடிவமைச்சிக்கிறார். இந்தப்படம் அவரோட நடிப்பை இன்னும் மெருகேத்தி காட்டும். அவருக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. தெலுங்கில் ராஷ்மிகாவ கொண்டாடுறாங்க. ஆனா பக்கத்து வீட்டு பெண் போல, அவ்வளவு எளிமையா இருப்பார். நடிப்புனு வந்தா அசத்திடுவார்.
ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா
இப்படத்தில் கார்த்தி, ராஷ்மிகா ஜோடி கலர்ஃபுல்லா இருக்கும். கார்த்தி, யோகிபாபு காமெடி கூட்டணி அதகளப்படுத்தி இருக்காங்க. கேஜிஎஃப் பட வில்லன் ராம்சந்திர ராஜு மிரட்டியிருக்கார். வெறுமெனே அவர பார்த்தால் கூட பயமா இருக்கும், அந்த அளவு மனுஷன் நடிப்பில் பின்னியிருக்கார்.
கார்த்தி
சுல்தான் பட காட்சி

விவேக் மெர்வின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு பெரும் கூட்டத்தை வைத்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணியிருக்கோம். தன்னை நம்பி வந்த உறவுகள எப்படி பாத்துக்கணும்ணு சுல்தான் சொல்லுவான். இது குடும்பத்துடன் ஜாலியா பார்க்கக்கூடிய, அனைவருக்கும் பிடிக்கும் படமா இருக்கும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.