ETV Bharat / sitara

டைட்டானிக்கை மூழ்கடித்து 'அவதார்' பண்டோராவில் நுழைந்து 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' சாதனை

author img

By

Published : Jul 21, 2019, 6:46 PM IST

'அவதார்' படத்தின் வசூல் சாதனையை 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' முறியடித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Avengers: Endgame

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்த்த 'அவெஞ்சர்ஸ்' படத்தின் கடைசி பாகமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' ஏப்ரல் மாதம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்க ஆரம்பித்தது. படம் வெளியான சில நாட்களிலேயே 'டைட்டானிக்' வசூலை முறியடித்தது.

தற்போது இப்படம் அவதார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக 'மார்வல்' நிறுவனத்தின் தலைவர் கெவின் பிட்ச் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Congratulations, we did it 👏🏻.

Officially, #AvengersEndgame has passed #Avatar to become the highest grossing film of all time at the worldwide box office. pic.twitter.com/E9gj8dRRvU

— Marvel Universe (@77MCU) July 21, 2019
பத்து ஆண்டுகளாக உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ஜேம்ஸ் கேம்ரூனின் பிரமாண்ட படைப்பான 'அவதார்' படம் 2.788 பில்லியன் டாலர் வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருந்தது.

இப்போது 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' 2.789 பில்லியன் டாலர் வசூல் செய்து அவதார் படத்தை பின்னுக்கு தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தச் சாதனைக்கு டிஸ்னி ஸ்டூடியோஸ், ‘மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள். இந்தப் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்த்த 'அவெஞ்சர்ஸ்' படத்தின் கடைசி பாகமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' ஏப்ரல் மாதம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்க ஆரம்பித்தது. படம் வெளியான சில நாட்களிலேயே 'டைட்டானிக்' வசூலை முறியடித்தது.

தற்போது இப்படம் அவதார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக 'மார்வல்' நிறுவனத்தின் தலைவர் கெவின் பிட்ச் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளாக உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ஜேம்ஸ் கேம்ரூனின் பிரமாண்ட படைப்பான 'அவதார்' படம் 2.788 பில்லியன் டாலர் வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருந்தது.

இப்போது 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' 2.789 பில்லியன் டாலர் வசூல் செய்து அவதார் படத்தை பின்னுக்கு தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தச் சாதனைக்கு டிஸ்னி ஸ்டூடியோஸ், ‘மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள். இந்தப் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளது.

Intro:Body:

Avengers End Game beats Avatar !0 years Record in world

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.