ETV Bharat / sitara

பொள்ளாச்சியில் உதயமான துணை நடிகர் சங்கம்: 100-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர் - துணை நடிகர் சங்கம்

கோவை: பொள்ளாச்சியில் புதிதாக உதயமாகியுள்ள துணை நடிகர் சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

pollachi
pollachi
author img

By

Published : Feb 3, 2020, 9:45 AM IST

சின்ன கோடம்பாக்கம் என்று சினிமா துறையினரால் அழைக்கப்படும் தென்னை நகரமான பொள்ளாச்சி விவசாய நிலங்களும், எழில் கொஞ்சும் அழகும் கொண்டு தென்னிந்திய சினிமா உலகின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குகிறது.

இங்கு 1960இல் இருந்து தற்போது வரை பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடந்துள்ளன. அதில் பெரும்பாலான படங்கள் நூறு நாள்களைக் கடந்து வெற்றியும் அடைந்துள்ளது. குறிப்பாக எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன், முத்துராமன் நடித்த காதலிக்க நேரமில்லை, ரஜினி நடித்த முட்டுக்காளை, ராணுவ வீரன், எஜமான், கமலின் சகலகலா வல்லவன், தேவர் மகன், அஜீத், விஜய் என தற்போதுள்ள பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டுவருகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாலிவுட் படங்களுக்கும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியிலிருந்து சினிமா உலகிற்குச் சென்ற சாண்டோ சின்னப்பா தேவர், பி.எஸ். வீரப்பா முதல் இயக்குநர் பரதன், பவித்ரன் உள்ளிட்டோர் சினிமா துறையில் தற்போது ஒரு பெரிய அடையாளமாக மாறியுள்ளனர்.

பொள்ளாச்சியிலிருந்து சினிமா துறையில் பணியாற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் திரைப்பட துணை நடிகர்கள் சங்க தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சினிமா துறையில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் எனப் பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை துணை கண்காணிப்பாளர் கே.ஜி. சிவக்குமாரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

துணை நடிகர் சங்க தொடங்க விழா

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் ராஜு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்து முடிந்த பின் அந்தச் சங்கத்தோடு இணைத்து அந்தச் சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளோம்.

அரசு சலுகைகள் எங்களைப் போன்ற கலைஞர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...

கலக்கலான டிரெஸ்ஸில் கார்த்திக் ஆரியனுடன் வலம்வந்த கரீனா கபூர்

Intro:actorBody:actorConclusion:பொள்ளாச்சியில் புதிதாக உருவானது துணை நடிகர் சங்கம், 100க்கும் மேற்ப்பட்டோர் இணைந்தனர்.

பொள்ளாச்சி- பிப்- 2

சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் சினமா துறையினரால் அழைக்கப்படும் தென்னை நகரமான பொள்ளாச்சி , விவசாய நிலங்களும் எழில் கொஞ்சும் அழகும், ஆழியார் அணையும் மேற்க்கு தொடர்ச்சி மலையின் செழிப்பான பசுமை தோற்றம் தென்னிந்திய சினிமா உலகத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குகிறது,இங்கு 1960ல் இருந்து தற்போது வரை பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் இங்கு நடந்து 100 நாட்களை கடந்து வெற்றி அடைந்துள்ளது.குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன், முத்துராமன் நடித்தகாதலிக்க நேரமில்லை, ரஜினி நடித்த முட்டுக்காளை, ராணுவ வீரன், எஜமான்,கமலின் சகலகல வல்லவன், தேவர் மகன், அஜீத், விஜய் என தற்போது உள்ள பிரபல நடிகர்கள் வரை படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது, கேரளா, கர்நாடக, ஆந்திரா, பாலிவுட் படங்களும்பொள்ளாச்சியில் படபிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.பொள்ளாச்சியில்இருந்து சினிமா உலகிற்கு சென்ற சாண்டோ சின்னப்பா தேவர் ,பி.எஸ்.வீரப்பா முதல் இயக்குனர் பரதன், பவித்ரன் உள்ளிட்டோர் சினிமா துறையில் தற்போது ஒரு பெரிய அடையாளமாக மாறியுள்ளனர். பொள்ளாச்சியில் இருந்து சினிமா துறையில் பணியாற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று பொள்ளாச்சியில் திரைப்பட துணை நடிகர்கள் சங்க துவக்க விழா நடந்தது. இதில் சினிமா துறையில் பணியாற்றும் ஆண்கள் பெண்கள் என பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை துணை கண்காணிப்பாளர் K.G.சிவக்குமாரிடம்பெற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் ராஜு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்து முடிந்த பின் அந்த சங்கத்தோடு இணைத்து அந்த சங்கத்துன் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்கப்போவதாகவும் அரசு சலுகைகள் எங்களைபோன்ற கலைஞர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த சங்கம் துவங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பேட்டி- ராஜு ( திரைப்பட சங்க தலைவர் பொள்ளாச்சி)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.