ட்ரெய்டண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுடன் இணைந்து தயாரித்த ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் கடந்த மாதம் Zee5 OTT தளத்தில் வெளியானது. இந்தத் தொடரில் மலையாள நடிகர் சரத் ஆட்டோ சங்கர் ஆக நடித்திருந்தார். வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த தொடருக்கு எம்டிவி ஐடபிள்யுஎம் டிஜிட்டல் விருது கிடைத்துள்ளது.
மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் சிறந்த பிராந்திய மொழி சீரிஸ் பிரிவில் ஆட்டோ சங்கர் எம்டிவி ஐடபிள்யுஎம் டிஜிட்டல் விருதைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து மனோஜ் பரமஹம்சா கூறுகையில், 'தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் முதல் தரமான ஒன்று ஆட்டோ சங்கர். நாங்கள் மொத்த சீரிஸையும் 35 நாட்களில் முடித்தோம். 1985 முதல் 1990 வரையிலான காலத்தைக் கண் முன் கொண்டு வருவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆட்டோ சங்கரை பார்த்த இயக்குநர் வெற்றிமாறன் எங்கள் குழுவை பாரட்டினார்' என்று தெரிவித்துள்ளார்.