நடிகர் தனுஷ் 'ராஞ்சனா', 'ஷமிதாப்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கும் படம் 'அட்ராங்கி ரே'. இந்தப் படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
'அட்ராங்கி ரே' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, வாரணாசி, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. இப்படத்தில் தனுஷ் விஷு கதாபாத்திரத்திலும் சாரா அலிகான் ரிங்கு கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சமீபத்தில் 'அட்ராங்கி ரே' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து 'அட்ராங்கி ரே' படத்தின் ட்ரெய்லர் இன்று (நவம்பர் 24) வெளியானது. மேலும் இப்படம் டிசம்பர் 24ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இந்தி, தமிழில் வெளியாகிறது.