இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வருபவர் கரண் ஜோஹர். இவரின் தயாரிப்பு நிறுவனமான 'தர்மா புரொடக்ஷன்ஸ்' பல பிரமாண்டமான படங்களைத் தயாரித்துள்ளது. இந்தியில் பல முன்னணி திரைபிரபலங்கள் இவரது படத்திலோ அல்லது தயாரிப்பு நிறுவனத்திலோ நடிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. இதன்பின் இவர் ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து இவர் விஜயை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என மூன்று படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த சில நாள்களாக சமூக வலைதளத்தில் பிகில் திரைப்படம் 20 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வலம்வந்தன. இதற்குப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முற்றுப்புள்ளி வைத்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதனிடையே கரண் ஜோஹர் 'அசுரன் 'படத்தையும் அட்லீயையும் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் வெகுவாகப் பாராட்டி பேசியிருந்தார்.
அதில் அவர், ''வெற்றி மாறனின் 'அசுரன்' பார்த்தேன். கடவுளே! என்னவொரு படம். தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். பார்க்கும்போது சீட்டின் நுனிக்கு வந்துவிட்டேன். அட்லீயின் 'பிகில்' படம் எனக்குப் பிடித்திருந்தது.
அது ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட். அவருடைய அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மசாலா சினிமாவின் மேஜிக்மேன் அவர்'' எனப் புகழாரம் சூட்டினார்.
இதற்கு அட்லீ, 'அன்பு கலந்த நன்றி சார்' என கரண் ஜோஹருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் புத்திசாலி நடிகர், அட்லி சூப்பர் ஸ்டார் டைரக்டர் - கரண் ஜோஹர் புகழாரம்!