சென்னை: தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக கடந்த ஆண்டு வெளியான 'அசுரன்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் கலக்கிய இந்தப் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக்காக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 'அசுரன்' தெலுங்கு பதிப்புக்கு 'நாரப்பா' என்று பெயர் வைத்துள்ளனர். அத்துடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அசுரன்' படத்தை தயாரித்த கலைப்புலி தாணு தெலுங்கு பதிப்பையும் தயாரிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் அட்லா இயக்குகிறார்.

கரைப்பல், கையில் அரிவாலுடன் நடிகர் தனுஷ் உக்கிரமான முகத்துடன் நடந்துவரும் தமிழ் 'அசுரன்' பட போஸ்டர் போன்று தெலுங்கிலும் அதே பாணியில் வெங்கடேஷ் கோபத்துடன் நடந்துவரும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியிருப்பதாக போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.