ETV Bharat / sitara

இசைப்புயலை ஓரங்கட்டிய அமீன் - album song

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் பாடியுள்ள 'சகோ வா' ஆல்பம் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சகோ வா
author img

By

Published : Jun 29, 2019, 12:15 PM IST

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகத்தையே கலக்கி வருகிறார். அவரது இசைக்கு மயங்காதவர் எவருமில்லை. இளைஞர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்றபடி இசையமைத்து வருகிறார். இசையின் மூலம் தமிழனின் பெருமையை உலகறிய செய்துள்ளார்.

இந்நிலையில், அவர் பாணியிலேயே அவரது மகன் அமீன் இசையால் மக்களின் மனதை களவாட வந்துள்ளார். அமீன் 'ஓ காதல் கண்மணி' படத்தில் 'உலாவா சலீம்' என்ற பாடலை பாடியிருந்தார். தற்போது அவர் பாடியுள்ள 'சகோ வா' என்ற பாப் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல சோனி மியூசிக் சவுத் நிறுவனம் இப்பாடலை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'சகோ வா' பாடலில் அமீன் பார்க்க சின்ன பையன் போல் அரும்பு மீசையுடன் ஸ்டைலாக இருக்கிறார்.

இதில் அமீனுடன் ரஹ்மானும் ஒரு நொடி வந்துபோவது ரசிகர்களை மகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். பாடல் வரிகளை விவேக், ஏடிகே எழுதியுள்ளனர். தற்போது, 'சகோ வா' பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.