ETV Bharat / sitara

ஆர்ஜே பாலாஜி ஜோடியாகும் பொம்மி - aparna balamurali

ஆர்ஜே பாலாஜி ஜோடியாக ‘பதாய் ஹோ’ ரீமேக்கில் அபர்ணா பாலமுரளி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aparna pair with Rj balaji in Badhai Ho remake

author img

By

Published : Jul 26, 2021, 3:21 PM IST

தமிழில் ‘சூரரைப் போற்று’ படத்தின் மூலம் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. இவர் அதற்கு முன்பு ‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எனினும் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்த பொம்மி கதாபாத்திரம் அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. தற்போது இவர் ஆர்ஜே பாலாஜி உடன் ஜோடி சேரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் வெளியான காமெடி திரைப்படம் ‘பதாய் ஹோ’. தமிழில் ‘வீட்ல விஷேசங்க’ என்ற தலைப்பில் இது ரீமேக்காக இருப்பதாகவும், அதை போனி கபூர் தயாரிக்கிறார் எனவும் தகவல் வெளியானது. இதில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அபர்ணா பாலமுரளி இதில் ஆர்ஜே உடன் ஜோடி சேரவிருக்கிறாராம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெகு விரைவில் வெளியாகும். ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளன.

இதையும் படிங்க: குஷ்புவை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் யூ-டியூப் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.